வறுமையின் பிடியில் சுதந்திரப் போராட்ட தியாகி


   சுதந்திர இந்தியாவில் கடந்த 1950ம் ஆண்டு ஜனவரி 26ம் நாள் அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்த நாளே இந்திய குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. ஆட்சியாளர்கள் தங்களது விருப்பம்போல் போல் செயல்படாமல் மக்களின் உணர்வுகளை புரிந்து செயல்பட வேண்டும் என்பதே குடியரசின் நோக்கம். மக்களின் அடிப்படை உரிமைகள், பாதுகாப்பு மற்றும் சகோதரத்துவம் பேணுவதற்கான உரிமையை குடியரசு தினம் நமக்கு உருவாக்கி தந்துள்ளது.
  மக்களுக்கான ஆட்சியை வழங்குபவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருப்பார்கள் என்ற மகத்தான ஜனநாயகத்தை ஆரம்பம் செய்து வைத்ததும் இக்குடியரசு தினமே. இந்த நிலையில், நாட்டின் 64வது குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, கடந்த 60 ஆண்டுகளில் நாடு பல்வேறு துறைகளில் வளர்ச்சிப் பெற்றுள்ளதாக பிரணப் முகர்ஜி கூறினார்.
  ஆனால், இந்தியா குடியரசாகி 64 ஆண்டுகள் ஆகிவிட்ட பின்னரும், நாட்டில் வறுமையும் இன்னும் நீங்கியபாடில்லை. சாதாரண மக்களுக்கு மட்டுமின்றி, விடுதலைக்காக போராடிய சுதந்திரப் போராட்ட தியாகிகள் பலரது நிலைமையும் இதுதான்.
   அரியலூர் மாவட்டம் மணத்தான் குளத்தை சேர்ந்த ஜோசப் என்ற இந்த சுதந்திரப் போராட்ட வீரர் ஜோசப், நேதாஜியின் படையில் சேர்ந்து ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டவர். இதன் பலனாக பர்மா சிறையில் பல ஆண்டுகள் தண்டனைப் பெற்றவர். சுதந்திரத்திற்கு பின்னர் விடுதலையாகி சொந்த ஊர் வந்த இவர், இன்று வரை ஒரு விவசாயக் கூலியாக, வறுமையுடன் போராடிக் கொண்டிருக்கிறார்.
   சுதந்திர தினம் மற்றும் குடியரசுத் தினம் என ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே, இந்த நாடு தங்களை நினைத்துப் பார்ப்பதாக வேதனையுடன் பதிவு செய்கிறார் ஜோசப். அதன் பின்னர் எவரும் எங்களை கண்டுக் கொள்வதில்லை என்பதும் இவரது ஆதங்கமாக உள்ளது.
                                        -பசுமை நாயகன்

குடி குடியை கெடுக்கும்

        குடித்துவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது என்று சட்டம் இருந்தும் அது நடைமுறை படுத்துவதில்லை. நகரங்களில் அங்கங்கு டாஸ்மாக் கடைகளும் அதோடு ஒட்டிப்பிறந்தது போல் பார்களும் இருக்கின்றன. அரசு டாஸ்மாக் நடத்துகிறது அரசியல் கட்சியினர் பார் நடத்துகின்றனர், சட்டம் வேடிக்கை பார்க்கிறது. படித்தவர்கள், படிக்காதவர்கள், விழிப்புணர்வு பெற்றவர்கள் சட்டம் தெரிந்தவர்கள், அரசு துறையினர் (காவல் துறையினரும்) என்று அனைத்துதரப்பு மக்களும் டாஸ்மாக் பாருக்கு வாகனத்தில் வருகின்றனர் தங்களது கடமையை செய்ய இங்கு வரும் மக்கள் குடித்துவிட்டு இரண்டு சக்கரம் வாகனம், கார் போன்ற வாகனத்தில் போதையுடன் வண்டியை ஓட்டிச்செல்கின்றனர் (Drunk & Drive) குடிபோதையில் வாகனம்  ஓட்டக்கூடாது என்று சட்டம் இருந்தும் குடித்துவிட்டு வாகனம் ஒட்டச்செல்கின்றனர். குடி போதையில் வாகனம் ஓட்டுவதால் பல விபத்துக்கள் நடைபெறுகிறது.
           தமிழகம் மட்டும் அல்லாது சென்னையில் பல இடங்களில் பார்களில் குடிப்பது அல்லாமல், ஆட்டோ, (டாடா மேஜிக்) கார் போன்ற வாகனங்களில் உள்ளே அமர்ந்து குடிக்கின்றனர். இவர்கள் குடித்துவிட்டு (Drunk & Drive) வாகனங்களை ஓட்டித்தானே செல்கின்றனர். சட்டம் என்ன செய்கிறது காவல் துறையினர் வாகனங்களில் அமர்ந்து குடிப்பவர்களை கைது செய்து தண்டிப்பார்களா? குடிக்க நினைப்பவர்கள் நடந்து அவர் அவர்கள் வீட்டு அருகில் உள்ள பார்களுக்கு சென்று குடிக்கலாமே ! இதனால் சாலை விபத்துக்கள் உயிர்சேதம் தடுக்கலாமே !
         தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகமாக லாரி ஓட்டுனர்கள் குடித்துவிட்டுதான்..........! தங்கள் தொழிலையே செய்கின்றனர் உதாரணத்திற்கு பல விபத்துகளை குறிப்பிடலாம். விபத்து நடந்த பிறகுதான் நடவடிக்கை எடுக்கின்றனர் காவல்துறை அதுவும் காலதாமதமாக அதிலும் அரசியல், செல்வந்தர்கள், தாதாக்கள் குறிக்கீடுகள் வேறுயிருக்கின்றனர். காவல் துறையினர் மணல்லோடு, செங்கல் லோடு, ஜல்லி லோடு ஓட்டுபவர்களை கடுமையாக சோதனை மேற்கொள்ள வேண்டும். குடித்துவிட்டு வாகனம் ஒட்டுபவர்களின் ஒட்டுனர் உரிமம் ரத்து செய்யவேண்டும். இதனால் பெரும் உயிர்சேதம் ஏற்படுத்தும் விபத்துக்களை தவிர்க்கலாம்.
-பசுமைநாயகன்

கொய்யா பயன்கள்

   ன்று குடிப் பழக்கத்தில் இருந்து விடுதலை தரக்கூடியது கொய்யாப் பழம் பற்றிய தகவல்.

பழங்களிலேயே விலை குறைவானதும், அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக் கூடியதுமான கொய்யாப் பழத்தில் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன.கொய்யாமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது, இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டுள்ளது.

* மது போதைக்கு அடிமையான மது பிரியர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட நினைத்தால் இப்பழத்தை அதிகம் சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டால் மது அருந்தும் ஆசை, வெறி எல்லாம் தூள் தூளாகி விடும். மிக எளிதில் மது போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம்.

ஏனைய பயன்கள்

* விற்ற‌மின் . பி மற்றும் விற்ற‌மின் . சி ஆகிய உயிர்ச்சத்துக்கள் கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ளன. கல்சியம், பொஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புக்களும் இதில் காணப்படுகின்றன.

* கொய்யாமரத்தின் இலைகள் திசுக்களை சுருக்கும் மற்றும் குருதிப்போக்கினைத் தடுக்கும் திறன் உடையவை, மலச்சிக்கல் போக்கும். கசாயம் வாந்தியினை தடுக்கும். ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டால் இலையை காய்ச்சி கொப்பளிக்கலாம்.

* கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன. கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.

* கொய்யா மரத்தின் குருத்து இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும் கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன.

* கொய்யாமரத்தின் பட்டை ப‌க்டீரியா அழுகலை தடுக்கும். காய்ச்சலைப் போக்கும். வேர்பட்டை குழந்தைகளின் வயிற்றுப்போக்கினை குணப்படுத்தும். கொய்யாப்பழத்தை அறிந்து சாப்பிடுவதை விட பழத்தை நன்றாக கழுவிய பிறகு பற்களில் நன்றாக மென்று தின்பதே நல்லது. இதனால் பற்களும், ஈறுகளும் பலப்படும்.

* வேறு எந்தப் பழத்திலும் இல்லாத விற்றமின் சி என்ற உயிர்ச்சத்து இப்பழத்தில் அதிக அளவில் காணப்படுகிறது. அதனால் வளரும் குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும். உடல் நன்கு வளரவும், எலும்புகள் பலம் பெறவும் கொய்யாப்பழம் உதவும்.

* கொய்யாவின் தோலில் தான் அதிகசத்துக்கள் உள்ளன. இதனால் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது. முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது. தோல் வறட்சியை நீக்குகிறது. முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராக மாற்றுகிறது.

* கொய்யா மரத்தின் சில பகுதிகளுடன் வேறு சில பொருட்களும் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கஷாயத்தை அருந்தினால் பிரசவத்திற்கு பின்பு வெளியாகும் கழிவுகளை வெளியேற்ற மிகவும் உதவுவதாக சித்த மருத்துவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* சாப்பிடுவதற்கு முன் இப்பழத்தை சாப்பிடுவது நல்லதல்ல. சாப்பிட்ட பின்போ, அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ, சாப்பிட நல்லது.

* நோயால் அவதியுற்று மருந்து சாப்பிட்டு வருபவர்கள் இப்பழத்தை சாப்பிட்டால் மருந்து முறிவு ஏற்படும். இருமல் இருக்கும் போது இப்பழத்தை சாப்பிட்டால் அதிகமாகும். தோல் தொடர்பான வியாதி உள்ளவர்கள் இப்பழத்தை உண்டால் நோய் அதிகரிக்கும்.

* கொய்யாப்பழத்திற்கு மருந்தை முறிக்கும் ஆற்றல் உண்டு. ஒரு சிலருக்கு மயக்கத்தை ஏற்படுத்தும். வாதநோய், ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிடக்கூடாது.

* கொய்யாப்பழத்தை இரவில் சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் வயிறு வலி உண்டாகும். கொய்யாவை அளவுடன் சாப்பிடவேண்டும். அளவிற்கதிகமாக சாப்பிட்டால் பித்தம் அதிகரித்து வாந்தி மயக்கம் ஏற்படும்.

* குடி போதையில் உள்ளவர்களுக்கு போதையை உடனே முறிக்க கொய்யா இலையை உண்ண கொடுத்தால் உடனே வெறி இறங்கும் என்பார்கள்
-இணைய செய்தியாளர் - A.R.விஸ்வநாதன்
உலகின் அதிசயம் என கூறப்படும் இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் மூன்று கட்டமாக 177 வருடங்கள் கட்டப்பட்டது , இந்த கட்டிடத்தை முதலில் கட்டும் போது, இதன் கீழ் உள்ளமண்ணை சோதிக்காமல் , ஒரு கட்டிடம் கட்டுவதற்கான அடிப்படை விசயங்களை கூட கடைப்பிடிக்காமல கட்டிட அடித்தளத்தை மிகவும் மோசமாக கட்டினர் , இதனால் இந்த கட்டிடம் சாயத்தொடங்கியது , இரண்டாம் தளம் கட்டும் போது போர் மூண்டதால் இதன் கட்டுமானம்
சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் தொடங்கியதும் ஓரளவிற்கு இதன் அடித்தள மண் இதற்கு ஒத்துழைத்தது ! இதனால்
மூன்றாவது தளத்தை அமைக்க முடிந்தது!ஒரு கேவலமான கட்டுமானத்திற்கு எடுத்துக்காட்டா ன ஒரு கட்டிடம் உலக
அதிசயப்படியலில் இன்றும் உள்ளது ! (AUG 8TH 1173 - 1372)
.
நம் தஞ்சையில் உள்ள கட்டிடக்கலைக்கு பெயர் போன ராஜா ராஜா சோழனால் கட்டப்பட 216 அடி உலகையே மிரளச்செய்யும்
தஞ்சை பெரிய கோயில் வெறும் 12 ஆண்டுகளில் கட்டப்பட்டது , இதன் கோபுரத்தில் உள்ள ஒரே ஒரு பாறை 80டன்( 80,000 கிலோ ) எடை கொண்டது , உலகையே வியக்க வைக்கும் இந்த 1000
வருடங்களாக மேலாக கம்பீரமாக நிற்கும் கட்டிடம் இன்று வரை எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் எப்படி கட்டப்பட்டது என்று வியப்பை மட்டுமே பதிலாய் வைத்துள்ள இப்படிப்பட்ட கட்டிடம் உலக அதிசய பட்டியலில் இடம் பெறவில்லை!
.
சில நேரங்களில் வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும் நாம், நம் தமிழ்நாட்டிலேயே அதைக்காட்டிலும் சிறப்பாக உள்ளனவற்றை பற்றி மறந்து விடுகின்றோம் !
                                                                                                       - S.B.ஹரிநாத்
அன்பான உறவுகளே இன்று +2 ரிஸல்ட் வெளியாகிறது ..வெற்றி பெறும் பிள்ளைகளை மேலும் ஊக்கப்படுத்துங்கள் தோல்வி பெறும் பிள்ளைகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துங்கள் காயப்படுத்திவிடாதீர்கள் இன்றைய தோல்வி நாளைய இமாலய வெற்றிக்கு அடித்தளம் என்பதை கூறி அரவணையுங்கள் குறிப்பாக பெண்பிள்ளைகள் மிகவும் சோர்ந்துவிடுவார்கள் அன்போடு அரவணைத்து அவர்களின் சோர்வான மனநிலையை மாற்றுவதே அவர்களின் எதிர்காலத்துக்கான அருமருந்து ....         
                                                                                                                    
மாணவர்களின் எதிர்காலம் அக்கரையில்   -சிபிசந்தர்