குடி குடியை கெடுக்கும்

        குடித்துவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது என்று சட்டம் இருந்தும் அது நடைமுறை படுத்துவதில்லை. நகரங்களில் அங்கங்கு டாஸ்மாக் கடைகளும் அதோடு ஒட்டிப்பிறந்தது போல் பார்களும் இருக்கின்றன. அரசு டாஸ்மாக் நடத்துகிறது அரசியல் கட்சியினர் பார் நடத்துகின்றனர், சட்டம் வேடிக்கை பார்க்கிறது. படித்தவர்கள், படிக்காதவர்கள், விழிப்புணர்வு பெற்றவர்கள் சட்டம் தெரிந்தவர்கள், அரசு துறையினர் (காவல் துறையினரும்) என்று அனைத்துதரப்பு மக்களும் டாஸ்மாக் பாருக்கு வாகனத்தில் வருகின்றனர் தங்களது கடமையை செய்ய இங்கு வரும் மக்கள் குடித்துவிட்டு இரண்டு சக்கரம் வாகனம், கார் போன்ற வாகனத்தில் போதையுடன் வண்டியை ஓட்டிச்செல்கின்றனர் (Drunk & Drive) குடிபோதையில் வாகனம்  ஓட்டக்கூடாது என்று சட்டம் இருந்தும் குடித்துவிட்டு வாகனம் ஒட்டச்செல்கின்றனர். குடி போதையில் வாகனம் ஓட்டுவதால் பல விபத்துக்கள் நடைபெறுகிறது.
           தமிழகம் மட்டும் அல்லாது சென்னையில் பல இடங்களில் பார்களில் குடிப்பது அல்லாமல், ஆட்டோ, (டாடா மேஜிக்) கார் போன்ற வாகனங்களில் உள்ளே அமர்ந்து குடிக்கின்றனர். இவர்கள் குடித்துவிட்டு (Drunk & Drive) வாகனங்களை ஓட்டித்தானே செல்கின்றனர். சட்டம் என்ன செய்கிறது காவல் துறையினர் வாகனங்களில் அமர்ந்து குடிப்பவர்களை கைது செய்து தண்டிப்பார்களா? குடிக்க நினைப்பவர்கள் நடந்து அவர் அவர்கள் வீட்டு அருகில் உள்ள பார்களுக்கு சென்று குடிக்கலாமே ! இதனால் சாலை விபத்துக்கள் உயிர்சேதம் தடுக்கலாமே !
         தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகமாக லாரி ஓட்டுனர்கள் குடித்துவிட்டுதான்..........! தங்கள் தொழிலையே செய்கின்றனர் உதாரணத்திற்கு பல விபத்துகளை குறிப்பிடலாம். விபத்து நடந்த பிறகுதான் நடவடிக்கை எடுக்கின்றனர் காவல்துறை அதுவும் காலதாமதமாக அதிலும் அரசியல், செல்வந்தர்கள், தாதாக்கள் குறிக்கீடுகள் வேறுயிருக்கின்றனர். காவல் துறையினர் மணல்லோடு, செங்கல் லோடு, ஜல்லி லோடு ஓட்டுபவர்களை கடுமையாக சோதனை மேற்கொள்ள வேண்டும். குடித்துவிட்டு வாகனம் ஒட்டுபவர்களின் ஒட்டுனர் உரிமம் ரத்து செய்யவேண்டும். இதனால் பெரும் உயிர்சேதம் ஏற்படுத்தும் விபத்துக்களை தவிர்க்கலாம்.
-பசுமைநாயகன்